ADVERTISEMENT

வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை! 

10:32 PM Sep 01, 2019 | santhoshb@nakk…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31- ஆம் தேதியே கடைசி நாள் என்றும், தேதி நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம், ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதன் காரணமாக நேற்று (31/0/2019) ஒரே நாளில் மட்டும் ஆன்லைன் மூலம் சுமார் 49 லட்சத்து 29 ஆயிரம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



அதாவது நேற்று (31/08/2019) மட்டும் ஆன்லைன் மூலமாக வினாடிக்கு சராசரியாக 196 பேரும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 7447 பேரும், ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 3.87 லட்சம் பேரும், மொத்தம் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் தங்களது வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்த போதும் வருமான வரித்துறையின் இணையதளம் "ஹாங்" ஆகாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT