ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரத்தை, டெல்லி ரோஸ் அவென்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை மேலும் ஒரு நாள் நாளை வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Advertisment

inx media case delhi cbi court extend the p chidambaram cbi custody

ஏற்கனவே சிபிஐ காவலை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர்- 5 ஆம் தேதி வரை நீட்டித்தும், ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கக்கூடாது என உத்தரவிட்டனர். அதேபோல் இடைக்கால ஜாமீன் தொடர்பாக, வழக்கு நடைபெற்று வரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் ப.சிதம்பரத்தின் தரப்பை அறிவுறுத்தினர்.