ADVERTISEMENT

தீபாவளி போனஸ் உடனடியாக வழங்கக்கோரி  ஏ.ஐ.டி.யு.சி  முற்றுகை போராட்டம் 

04:02 PM Oct 20, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் எந்த விதமான சமூக பாதுகாப்பின்றி, உத்தரவாதமான வருமானமின்றி இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு வரக்கூடிய சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு அமைப்பு சாரா சங்கத்தின் மூலம் கடந்த காலங்களில் வழங்கி வந்த தீபாவளி உதவித் தொகையும் சில ஆண்டுகளாக சரிவர கொடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு இவர்களுக்கு ரூ.5000 தீபாவளி உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு தற்பொழுது ரூ.3500 வழங்குவதற்கு முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசு இனியும் காலம் கடத்தாமல் கட்டிடத் தொழிலாளர்களுக்கு வழங்கியது போல் ரூ.3500 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் உடனடியாக தீபாவளி உதவித்தொகை வழங்க வேண்டும். இந்தப் பணத்தை தீபாவளிக்கு முன்னதாக வங்கியில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அலுவலகத்தை ஏ.ஐ.டி.யு.சி சார்பில் மாநில பொதுச்செயலாளர் சேது. செல்வம் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT