ADVERTISEMENT

ஒன்றரை ஆண்டுக்குபின் தமிழகம் வரும் அமித்ஷா...

11:38 AM Jul 08, 2018 | kamalkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்யவும் உள்ளார். இந்நிலையில் நாளை காலை 11 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்.

அதன்பின் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஒரு அரங்கில் தமிழ்நாடு(39 தொகுதிகள்), புதுச்சேரி மற்றும் அந்தமான் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், முன்தயாரிப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து பேசப்படும் இந்த சந்திப்பு மதியம் 12 மணிமுதல் 2 மணிவரை நடைபெறுகிறது.

பின் 3 மணிமுதல் 4 மணிவரை சங்க் பரிவார் கூட்டம், 4 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நாடாளுமன்ற தேர்தல் குறித்து 14 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும், 39 ஆயிரம் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும் விவாதிக்க இருக்கிறார். இப்படியாக அவரின் சந்திப்புகள் இரவு 9.30 மணிவரை தொடர்கிறது. இதில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. பின் 10ம்தேதி காலை புறப்படுகிறார்.

அமித்ஷா கடைசியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக (அக்டோபர் 2016) வந்தார். அதன்பின்பு நாளைதான் வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT