ADVERTISEMENT

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

02:41 PM Jul 31, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும், மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. அப்போது இரண்டு மாதத்தில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க நேரிடும் என தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

இதற்கிடையில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முறைகேடு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் 6 மாதம் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் ஐந்து கேட்டகிரி ஊழியர்களை விசாரிக்க வேண்டி உள்ளதால் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT