ADVERTISEMENT

செப்டம்பர் 2 இல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல் 1 விண்கலம்

04:24 PM Aug 28, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ ஏவ உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு நிலவுக்கு மிக அருகில் சென்றதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இந்தியா முழுவதும் இந்த சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்ல உள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆயிரத்து 475 கிலோ எடை கொண்டதாகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் ஆதித்யா விண்கலத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என இஸ்ரோ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT