ADVERTISEMENT

ராகுல் பிறப்பை பற்றி சர்ச்சை கருத்துகூறிய தலைவர் நீக்கம்!! மாயாவதி அதிரடி!!

05:27 PM Jul 17, 2018 | vasanthbalakrishnan

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறப்பை பற்றி சர்ச்சை கருத்து கூறிய பகுஜன் சமாஜ் கட்சியின் துணை தலைவரை கட்சியின் தலைவர் மாயாவதி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராகுல் காந்தியின் உடம்பில் வெளிநாட்டு ரத்தம் ஓடுகிறது எனேவ அவரால் எப்போதும் இந்தியாவின் தலைவராக முடியாது என உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த விழா ஒன்றில் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் துணை தலைவர் ஜெய்பிரகாஷ் சிங் வன்மையாக சாடியிருந்தார்.

ராகுல் காந்தியின் உடலில் வெளிநாட்டு ரத்தம் ஓடுகிறது ,அவர் பார்க்க அவரது தந்தை ராஜீவ் காந்தி போல இருக்கலாம் ஆனால் அவரது செயல்பாடுகள் அனைத்தும் வெளிநாட்டவரான அவரது அன்னை சோனியா காந்தியின் சுவடுகளை பின்பற்றும் ஒன்றாகவே இருக்கிறது என ஆவேசமாக பேசினார். அதுமட்டுமின்றி அடுத்த மன்னர் அரசியின் மகனாக இருக்க முடியாது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவராகதான் இருக்கமுடியும் எனவே ராகுல் காந்தி இந்தியாவின் தலைவராகவோ, பிரதமராகவோ ஆக முடியாது என கூறியிருந்தார்.

பாஜக ஆட்சியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து அடுத்த தேர்தலுக்கு ஒரு பலமான அணியை உருவாக்க முயற்சித்து வரும் சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி துணைத்தலைவரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ராகுல் காந்தியின் பிறப்பை பற்றி அவர் பேசிய இந்த சர்ச்சைக்குரிய பேச்சு பல கண்டனங்களை பெற்றுவந்த நிலையில் ராகுல் காந்தியின் பிறப்பை பற்றி தவறாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் துணை தலைவர் ஜெய்பிரகாஷ் சிங்கை கட்சியிலிருந்து நீக்கியதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT