style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6677891863" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து...
இந்தியாவிற்கு புதிய கண்ணோட்டம் தேவை, 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறாது. எதிர்கட்சிகள் அனைத்தும் வலுவாக ஒன்றிணைவோம். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது, பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றால் பாஜக ஆட்சி மீது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குறிப்பாகபிரதமர் மோடி ஆட்சியின் மீது இளைஞர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது, இந்த வெற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கும், விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும். 3 மாநிலங்களில் பாஜகவை தோற்கடித்துள்ளோம். தெலுங்கானாவில் தோல்வியடைந்தாலும், அங்கு பணியாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுகள். விவசாயிகளுக்காகவும், இளைஞர்களுக்காகவும் பணியாற்றுவோம்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});