ADVERTISEMENT

“95% மதுரை எய்ம்ஸ் பணி நிறைவு” - ஜெ.பி.நட்டா 

04:19 PM Sep 22, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்தது” என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெபி நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார். தமிழகம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மதுரையின் பாஜகவின் பல்துறை வல்லுனர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெபி நட்டா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1,264 கோடியும், தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து, அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ரூ.550 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT