ADVERTISEMENT

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 லட்சம் மாணவர்கள் தோல்வி- 34 பேர் தற்கொலை! 

12:16 PM Jun 10, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. ஆந்திராவில் 13 மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 3- ஆம் தேதி அன்று 10- ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தேர்வில் 70.70% மாணவிகளும், 64.02% மாணவர்களும் வெற்றி பெற்றனர். மொத்தமாக 4 லட்சம் மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். எனினும், 2 லட்சம் மாணவ, மாணவிகள் தோல்வியடைந்தனர். இதில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளில் 34 பேர் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம், ஆந்திராவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT