ADVERTISEMENT

150 குழந்தைகள் இறந்த சம்பவம்... ஆஸ்படாஸ் சீட்டுகளை கொண்ட வீடுகளில் வசித்தவர்கள்... ஆய்வில் அதிர்ச்சி!!

05:55 PM Jun 29, 2019 | kalaimohan

அண்மையில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் என்செபாலிடிஸ் எனும் மூளை காய்ச்சல் காரணமாக பீகாரில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக இந்த வகை மூளை காய்ச்சல் ஏற்பட்டு பரிதாபமாக 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பான காரணத்தை அறிய எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ ஆய்வு குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர் ஆஸ்படாஸ் எனப்படும் சிமெண்ட் சீட்டுகளை மேற்கூரையாய் கொண்ட வீடுகளில் வசித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இரவில் கூட வெப்பத்தை வெளிவிடக்கூடிய தன்மை கொண்டவை இந்த ஆஸ்பெடாஸ் சீட்டுகள். அவற்றின் தொடர் வெப்பமும் இதற்கு காரணம் என அந்த குழு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மார்ச் மாதம் முதல் நீர்ச்சத்து குறையை நீக்க கொடுக்கப்படும் ஓ.ஆர்.எஸ் பவுடரும் சுகாதாரத்துறையால் வழங்கப்படவில்லை. மேலும் வளர்ச்சிதை மற்றக் கோளாறு, பலவீனம், வயதைவிட எடை குறைவு போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளும் இந்த சம்பவத்திற்கு காரணம்.


நாள்தோறும் சராசரியாக 500 புறநோயாளிகள் வந்துசெல்லும் பீகார் முஷாபூர் மருத்துவமனையில் மொத்தம் 3 அல்லது 4 மருத்துவர்களே இருந்ததே குழந்தைகள் விரைவில் குணமாகாததற்கு காரணம் எனவும் அந்த ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT