ADVERTISEMENT

அதிக லஞ்சம் வாங்கும் மாநிலம் எது..? பட்டியல் வெளியீடு... தமிழகத்தின் இடம்...

10:47 AM Nov 29, 2019 | kirubahar@nakk…

TRANSPARENCY INTERNATIONAL என்ற நிறுவனம் நடத்திய ஊழல் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா முழுவதும் 20 மாநிலங்களில் சுமார் 1,90,000 பேரிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் முடிவில், ஊழல் அதிகமுள்ள மாநிலம் என்ற பெயரை ராஜஸ்தான் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் ஆறாவது இடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 100-ல் 62 பேர் அரசு அலுவலகங்களில் தங்களது வேலை நடக்க வேண்டும் என லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக நிலம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக 41 சதவிகிதம் பேரும், நகராட்சி நிர்வாகங்களில் பணி நடக்க 19 சதவிகிதம் பேரும், காவலர்களுக்கு 15 சதவீதம் பெரும் லஞ்சம் தருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த கணக்கெடுப்பின்படி, 50% க்கும் அதிகமான இந்தியர்கள் 2019 ஆம் ஆண்டில் ஒரு முறையாவது அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர். 82% பேர் ஊழலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அல்லது நடவடிக்கைகள் பயனற்றவை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல 64% மக்கள் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று கூறியுள்ளனர். லஞ்சம் வாங்குவது சில மாநிலங்களில் குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 சதவிகிதம் லஞ்சம் பெறுவோர் எண்ணிக்கை கூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT