style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடலூர் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் தெய்வநாயகி. இவர் கடலூர் முதுநகரை சேர்ந்த ஹவுஸ் அகமது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதுகுறித்த புகாரின் பேரில் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தெய்வநாயகியை கைது செய்தனர்.
இதேபோல்முட்லூரை சேர்ந்த ஷேக் அமீது என்பவரிடமிருந்து தாலிக்கு தங்கம் வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சமாக பெற்ற பரங்கிப்பேட்டை சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் பானுமதி கைது செய்யப்பட்டார்.
அடுத்தடுத்து இரண்டு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.