ADVERTISEMENT

பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய விவகாரம்! - மன்னிப்பு கோரினார் ஆளுநர்

02:05 PM Apr 18, 2018 | Anonymous (not verified)

பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை, மாணவிகளைத் தவறான வழியில் பயன்படுத்த முயன்ற விவகாரத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நேற்று மாலை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

ADVERTISEMENT

செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடைந்த நிலையில், எழுந்துவந்த ஆளுநர் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியத்தின் கன்னத்தில் தன் கைகளால் தட்டினார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த செய்கை குறித்து கடுமையாக பதிவிட்டிருந்தார். ‘என் பணியைப் பாராட்டும் விதமாகவோ, வயதில் மூத்தவர் என்ற அடிப்படையில் அன்பை சலுகையாக வழங்கும் விதமாகவோ ஆளுநர் என் கன்னத்தைத் தொட்டிருக்கலாம். ஆனால், அதற்கு என்னிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இது மிகப்பெரிய தவறு’ என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது செய்கைக்கு மன்னிப்பு கோருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக மன்னிப்புக் கடிதத்தையும் பெண் செய்தியாளர் லட்சுமிக்கு மின்னஞ்சல் வாயிலாக அவர் அனுப்பியுள்ளார். அதில், ‘சிறப்பாக கேள்வி கேட்டதால் பாராட்டும் விதமாகவும், தன் பேத்தி என்று நினைத்தும்தான் செய்தியாளரின் கன்னத்தைத் தட்டினேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் கேள்விகளைப் பாராட்டும் விதமாக நீங்கள் என் கன்னத்தைத் தட்டியாதக் கூறியிருக்கிறீர்கள். ஆனால், அது என்னை ஆற்றுப்படுத்தவில்லை என்றாலும், நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT