Tamil Nadu Governor pays surprise visit to Delhi

Advertisment

பல்வேறு சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பனிப்போர் நிலவி வரும் சூழலில் இருவரும் வரும் மே 16- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று நடைபெறவுள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் 164 பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணிக்கு திடீர் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வருடன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியிருந்தது. மேலும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநர் மீது பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் வைத்திருந்த நிலையில் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.