ADVERTISEMENT

7 கட்டங்களாக மக்களவை தேர்தல்! மே-23ல் வாக்கு எண்ணிக்கை 

05:39 PM Mar 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 17வது மக்களவை தேர்தல் தேதி குறித்து அறிவித்தார்.

ADVERTISEMENT

’’17வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்-11, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-18, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல்-18, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் -29, ஐந்தாம் கட்ட தேர்தல் மே-6, ஆறாம் கட்ட தேர்தல் மே-12, 7ம் கட்ட தேர்தல் மே-19ல் நடைபெறும்.

அனைத்து கட்ட தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே-23ம் தேதி அன்று நடைபெறும்.’’என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT