election

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டணிஎனகளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (11.02.2021) 2-வது நாளாக சென்னையில் ஆலோசனை நடத்த இருக்கிறது.

Advertisment

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு சென்னையில் இரண்டாம் நாளாக இன்று ஆலோசனை நடத்த உள்ளது. இன்று காலை 10 மணிக்குத் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்கிறது.அதனையடுத்து 11 மணிக்குத் தமிழக தலைமைச் செயலாளர்,டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது.

Advertisment

இந்த இரு ஆலோசனைகளை அடுத்து, மதியம் ஒரு மணிக்கு சுனில் அரோரா தலைமையிலான குழு, தேர்தல் ஏற்பாடு பற்றி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பபட்டுள்ளது.