ADVERTISEMENT

'நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது’

10:30 AM Jun 21, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

அரிய வானியல் நிகழ்வான வருடாந்திர சூரிய கிரகணம் நாட்டின் சில பகுதிகளில் தெரிய தொடங்கியது.

ADVERTISEMENT

இன்று (21/06/2020) நிகழ்ந்து வரும் சூரியகிரகணத்தின்போது, சந்திரனின் வெளிப்புற அளவு சூரியனை விட 1% சிறியதாக இருக்கும். காலை 09.15 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் பிற்பகல் 03.04 மணி வரை நிகழவுள்ளது. சென்னையை பொறுத்தவரை 34% மட்டுமே சூரிய கிரகணம் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் இதை காண முடியும். 2020- ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல், நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT