ADVERTISEMENT

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!

04:11 PM May 23, 2018 | Anonymous (not verified)


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் இன்று காலை வரை 12 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைதொடர்ந்து, இன்று காலை முதல் தூத்துக்குடியில் போலீசார் பொதுமக்களிடையே மீண்டும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதில் போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி கலைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் அண்ணாநகர் பகுதியில் போலீசார் போராட்டகாரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் கல்வீச்சில் தூத்துகுடி மாவட்ட எஸ்.பி. மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கல்வீச்சை தொடர்ந்து போலீசார் மீண்டும் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்று சூழல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன்,

ஸ்டெர்லைட்டிடம் பணம் வாங்கிக்கொண்டே போலீஸ் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தமிழக போலீசுக்கு பணம் கொடுத்து கலவரத்தை தூண்டிவிட்டுள்ளது ஸ்டெர்லைட். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு பணம் செல்கிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT