ADVERTISEMENT

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!! புதிய டெக்னிக்கில் மணல் கடத்தும் கடத்தல்காரர்கள்...

02:22 PM Oct 13, 2018 | selvakumar


ADVERTISEMENT

ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது, மண் எப்படி அள்ளுவார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக தற்போது நடந்துள்ளது.

ADVERTISEMENT

கொள்ளிடம் ஆற்றில் படகுகள் மூலம் மணல் கடத்தி வந்தவர்களை 3 படகுகளுடன் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்துவருகிறது, இதனை தடுப்பதற்கு சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பாலசந்திரன் தலைமையிலான போலீஸார் சீர்காழி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் மணல் திட்டுகளிலிருந்து படகுகள் மூலம் மணலை கடத்திக் கொண்டு ஒரு கும்பல் கரைக்கு வந்துகொண்டுவருதை கண்ட போலீஸார் அவர்களை பிடிக்க முயன்றனர், அவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் படகுகளை விட்டுவிட்டு தப்பினர்.

பிடிபட்ட ஒருவர் கொள்ளிடக்கரையோரம் உள்ள நாதல்படுகை கிராமத்தை சேர்ந்த சரத்குமார், வயது 22 . அவரையும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 நாட்டுப் படகுகளை பறிமுதல் செய்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸாரின் தொடர் விசாரணையில், மணல் திட்டுகளிலிருந்து இரவு நேரங்களில் படகுகளில் மணலை கடத்தி வந்து கரை பகுதியில் மொத்தமாக கொட்டிவைத்துவிட்டு பின்னர் லாரிகள் மூலம் அதை வேறு பகுதிக்கு கொண்டு சென்று மணல் விற்பனை செய்வதாக கூறினர்.

"இரவில் எஞ்சின் வைத்த ஃபைபர் படகுகளிலும் மணல் கடத்தல் நடைபெறுவதாகவும், இதை ஒன்றுமே செய்யமுடியவில்லை என்றும் புலம்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.

மணலை கொள்ளையடிக்க ஒவ்வொரு நாளும் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ, சைக்கிளில் கோணிச்சாக்கு மூலம் கடத்துறானுங்க, சூப்பர் எக்சல் டூவிலரில் பத்து கோணிசாக்குளில் மணலை கடத்துறாங்க, டாட்டா ஏஸ் வண்டியில் கடத்துறாங்க, மாட்டுவண்டி, டிராக்டர், லாரியை தாண்டி இப்போ மீன்பிடிக்கும் படகுகளிலும் கடத்துறாங்க, இத தடுக்கவே முடியாது, கடந்த சில மாதங்களில்கூட ஆற்றில் சட்டிகளுடன் இறங்கி (தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்போதே) மணல் அள்ளுகிறார்கள் என்று புலம்புகின்றனர் சில காவல்துறையினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT