ADVERTISEMENT

கரோனாவே இல்லை... 100 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள்! - மன்சூர்அலிகான் ஆவேசம்..!

11:58 AM Apr 17, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது அவருக்குத் திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்குச் சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார்.

முன்னதாக நேற்று மன்சூர்அலிகான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நாட்டு மக்கள் ஆட்டு மந்தைகளா? வெறி நாய்களா? உங்க இஷ்டத்துக்கு ஊசி போடுவீங்களா? அந்த ஊசியில் என்ன கண்டெண்ட் இருக்கு. அந்த ஊசியை ஏன் கம்பெல் பண்ணிப் போடுறீங்க? கேட்க யாருமே இல்லையா?

ஒரு வருஷமா சொல்கிறேன். கரோனா டெஸ்ட் எடுப்பதை நிப்பாட்டுங்க. இந்தியா முழுக்க நிப்பாட்டுங்க. அடுத்த நிமிஷம் கரோனா இருக்காது. நேற்று நல்லாதானே இருந்தார் இந்த மனுஷன். எதுக்கு ஊசி போட்டீங்க. அந்த ஊசியில் என்ன கண்டெண்ட் இருக்கு. கரோனா என்பது சளி, காய்ச்சலில் ரொம்ப வருசமாகவே இருக்கு. கரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் குற்றம் சுமத்துகிறேன். கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏதாவது ஒன்று என்றால் யார் பதில் சொல்வது.

நான் தொண்டாமுத்தூரில் குப்பையில் படுத்திருந்தேன். பிச்சைக்காரர்களிடம் சோறு வாங்கிச் சாப்பிட்டேன். எனக்குக் கரோனா வரவில்லை. மாஸ்க் போடுவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் தெரியுமா?

யார் கேட்டா ஊசி. எதற்கு ஊசி. கரோனாவே இல்லை என்று நான் சொல்கிறேன். என்னைத் தூக்கி ஜெயிலில் போடுங்கள். ஏதாவது ஆச்சு, நடக்குறதே வேற. கரோனா எங்க இருக்கு. டெஸ்ட் தப்பா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மாத்திரை தப்பா கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரெடில்ஸ் படப்பிடிப்பு நடக்கிறது. அதில் கலந்துகொள்ள டெஸ்ட் எடுக்க 3 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கிறார்கள். எங்கே போவாங்க பணத்துக்கு. அதில் கமிஷன் பாக்குறாங்க. கரோனா இருக்கு என்று சொல்றீங்களா. அப்படி என்றால் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள். இல்லையென்றால் கரோனாவே இல்லை என்று அறிவியுங்கள்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்தால்தான் ஊசி போடணும். நல்லா இருக்கிறவர்களுக்கு எதற்கு ஊசி. அப்படி ஊசி போடணும் என்றால் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள். 100 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். பின்னர் ஏன் ஊசி போடுகிறீர்கள்.

பெருந்தொற்று, பெருந்தொற்று என்று சொல்கிறீர்கள். ஜெயலலிதா எதிர்கொள்ளவில்லையா? டெங்கு காய்ச்சல் வரலையா? நிலவேம்பு கசாயம் கொடுக்கவில்லையா? மூலிகையை டெவலப் செய்யுங்க. கசாயம் குடியுங்கள். செல்வாக்கு இழந்த அரசியல். செல்வாக்கு இழந்த தலைவர்கள். முற்றிலும் செல்லாக்காசா செல்வாக்கு இழந்த இந்த அரசாங்கம் கரோனாவை கையில் பிடித்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது'' என்றார் ஆவேசமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT