ADVERTISEMENT

’’ஆளுனர் இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் நிராகரிக்க முடியாது’’ - ராமதாஸ்

06:59 PM Sep 09, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என்று முடிவெடுத்து என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பரிந்துரை தீர்மானத்தை ஆளுநருக்கு இன்றே அனுப்பி வைக்கப்படும் என்றும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ், இது அமைச்சரவை முடிவல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் முடிவு - ஆளுனர் தாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில் அவர் மேலும்,

’’ராஜிவ் கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுனருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. தமிழக அமைச்சரவையின் முடிவு வரவேற்கத்தக்கதாகும். இது தமிழக அமைச்சரவையின் முடிவு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகத்தின் விருப்பமும் இதுவே.

7 தமிழர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்த நிலையில், அதனடிப்படையில் தமிழக அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது. ஒன்றரை ஆண்டு கால பினாமி ஆட்சியில் எடுக்கப்பட்ட உருப்படியான முடிவு இதுவாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161&ஆவது பிரிவின்படி ஆளுனருக்கு இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆளுனர் இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் நிராகரிக்க முடியாது. கடந்த 2000-ஆவது ஆண்டில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி அப்போதைய திமுக அரசு அளித்த பரிந்துரையை ஆளுனர் பாத்திமா பீவி ஏற்றுக் கொண்டு தண்டனையைக் குறைத்தார் என்பது வரலாறு ஆகும்.

எனவே, தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை சர்ச்சை ஆக்காமல், அதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனர் பன்வாரிலால் புரோகித் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT