ADVERTISEMENT

கரோனா சிகிச்சைக்கு ரூ.12 லட்சம் வசூல்... தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிக ரத்து...

04:58 PM Aug 01, 2020 | rajavel

ADVERTISEMENT

சென்னை தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோய்க்கான சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து மக்கள் நல்வாழ்வு துறையினர் கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள bewell மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூபாய் 12,20,000 வசூலிக்கப்பட்ட விவரம் உறுதி செய்யப்பட்டது.

மேலும் சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் bewell மருத்துவமனைக்கு கரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையைச் சேர்ந்த மனோகர் என்பவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் அவரை bewell மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை எடுத்துக்கொண்ட அவருக்கு 16 லட்சம் பணம் கட்ட வேண்டும் என்று பில் கொடுத்துள்ளனர். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த அவரது குடும்பத்தினர், உரிய சிகிச்சை அளிக்கவில்லை, ஆனால் கட்டணம் மட்டும் கட்டச்சொல்லி நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT