ADVERTISEMENT

கலைஞரின் இறுதிச்சடங்கை தடுத்து நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்

02:46 PM Aug 08, 2018 | Anonymous (not verified)

கலைஞர் இறுதிச்சடங்கை தடுத்து நிறுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுக செயல்தலைவர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.

இதையடுத்து, தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், திமுக தலைவர் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினாவில் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், உத்தரவை ரத்து செய்யக்கோரும் டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை நிராகரித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT