Skip to main content

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் மீது பற்று வைத்திருக்கிறார் - தமிழருவி மணியன் பேச்சு!

Published on 28/01/2020 | Edited on 29/01/2020


துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் தொடர்பான ஒரு கருத்தை மாற்றி கூறிவிட்டதாக பெரியாரிஸ்ட்டுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். பெரியார் தொடர்பான அவரின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

ரஜினி கூறியதில் எந்த தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. அதில் சிறு பிழை இருக்கிறது. அதை நான் அவரிடம் அடுத்த நாள் நேரில் சந்தித்தபோது கூட தெரிவித்திருக்கிறேன். அந்த கூட்டத்தில் ராமர் சிலைகளை யாரும் நிர்வாணமாக எடுத்து செல்லவில்லை. மேலும், செருப்பு மாலையும் போடவில்லை. ஆனால், கூட்டத்தில் இருந்தவர்கள் விடாமல் செருப்பால் ராமர் சிலைகளை அடித்தார்கள் என்பது மட்டும் உண்மை. இதை ரஜினி அவர்களிடம் நானே தெரிவித்தேன். செருப்பு மாலை போட்டார்கள் என்பதை விட செருப்பால் தொடர்ந்து அடித்தார்கள் என்பது இன்னும் கொடூரமாக இல்லையா என்று அவர் என்னிடம் கேட்டார். இந்த மாதிரி எந்த சம்பவமும் நடைபெறாமல் இருக்கையில், ரஜினி பெரியார் தொடர்பாக இந்த மாதிரி கருத்துக்களை தெரிவிப்பார் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். நீங்கள் அவர் சொன்னதை விட மோசமாக செய்திருக்கிறீர்கள். 

 

gs




பெரியார் மீது வீசப்பட்டது யார் செருப்பு என்று பிரச்சனை இருக்கிறதே?

யார் செருப்பாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஜனசங்கத்தினர் செருப்பை வீசியதாக கூறுகிறீர்கள். அவர்கள் எதற்காக வீசினார்கள். பெரும்பாலான இந்துக்கள் வணங்கும் கடவுளான பெருமால், முருகன், ராமன், சிவன் உள்ளிட்டவர்களின் சிலைகளை பார்க்க சழிக்காத கோலத்தில் ஊர்வலமாக அவர் எடுத்து சென்றுள்ளார்கள். இதனால் அவர்கள் பெரிதும் வருத்தமுற்றார்கள். அதில் வருத்தமுற்ற ஒருவர் செருப்பை எடுத்து வீசியுள்ளார். அவர் பெரியாரை நோக்கி கூட அந்த செருப்பை வீசியிருக்கலாம். ஆனால் அந்த செருப்பு பின்னால் வந்த வாகனத்தில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்தவர் அதனை எடுத்து ராமர் சிலை அடித்ததாக தற்போது இதுதொடர்பான பேட்டிகளில் கூறுகிறார். நிறைய செருப்பு அடுத்தடுத்து வந்ததாக கூறுகிறீர்கள். நான் பாஜகவுக்கோ அல்லது ஜனசங்கத்துக்கோ வங்காலத்து வாங்க இங்கே பேச வரவில்லை. இதில் என்ன நியாயம் என்று கேட்கிறேன். இந்திய அரசியலைப்பு வழங்கிய உரிமைகளின் படி ஒருவன் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதை இன்னொருவர் காயப்படுத்த யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. இது அநாகரீகமான நடந்துகொண்ட சம்பவம் என்று அன்றைய முதல்வர் கருணாநிதி தேர்தலுக்காக தெரிவித்துள்ளார். இதை நான் சொல்லவில்லை, கருணாநிதியே சொல்லியிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிக்கையாளர் சோ சேலம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதாக அந்த வழக்கில் வாதாடியவரே சொல்லியிருக்காரே?

எனக்கு அதைபற்றி முழுவதுமாக தெரியாது. தெரியாத ஒன்றை தெரிந்தது போல் கூறுபவன் நான் அல்லன். பெரியார் செருப்பை வைத்து அடித்தது போல எல்லாம் செய்திகள் வெளிவரவில்லை. நீங்கள் சொல்வது போல எந்த ஊடகங்களிலும் செய்திகள் வரவில்லை. நான் ரஜினி ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல கடமைபட்டுள்ளேன். ரஜினிகாந்தை காயப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தற்போது திடீரென தோன்றியுள்ள பெரியாரிஸ்ட்டுகள் அவரை சீண்டுவதற்காக பல்வேறு உக்திகளை ரஜினிக்கு எதிராக மேற்கொள்கிறார்கள். இதற்காக அவரின் ரசிர்கள் பெரியாரை தரம்தாழ்ந்து விமர்சிக்க கூடாது என்று நான் கூறிக்கொள்கிறேன். ரஜினிகாந்த் பெரியாருக்கு எதிரானவர் அல்ல. பெரியாரின் மீது பற்று வைத்துள்ளவர்.