Skip to main content

புனித தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   குறும்படம் மற்றும்   ஊடகங்கள் பற்றிய கண்காட்சி  

Published on 26/02/2018 | Edited on 28/02/2018

சென்னை புனித தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஸ்கூல் ஆப் மீடியா ஸ்டடீஸ் நடத்தும் 'லுமென்ஸ் 18' எனும் ஊடகம் சார்ந்த கண்காட்சி  நாளைமுதல் நடைபெறவுள்ளது.
இதில் கலை (Art), வடிவமைப்பு (Design), குறும்படம் (Short Film), புகைப்படக்கலை (Photography) போன்ற தலைப்புகளில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவுள்ளனர்.

27-02-2018  (முதல்நாள்) காலை 
கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர்.சாமுவேல் சுகுமார், கல்லூரி செயலர் திரு.இடிகுலா முன்னிலையில் திரைப்பட ஒளிப்பதிவாளர் & நடிகர் திரு.நட்ராஜ் (நட்டி) நிகழ்ச்சியை துவக்கி வைக்கவுள்ளார்.

மதியம்
Environmental Exposure என்ற தலைப்பில் திரு.ஆதி வள்ளியப்பன் (தி இந்து) அவர்களும், Media & Human Rights என்ற தலைப்பில் திரு.சுப.தென்பாண்டியன் (வழக்கறிஞர்) அவர்களும் உரையாற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

st.thomas

28-02-2018 (இரண்டாம் நாள்) மதியம்
Investigative journalism என்ற தலைப்பில் திரு.நக்கீரன் கோபால் (நக்கீரன் Founder&Editor) அவர்களும், Digital painting என்ற தலைப்பில் திரு.கார்த்திகேயன்(ஆனந்த விகடன்) அவர்களும் உரையாற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 

01-03-2018 (மூன்றாம் நாள்) காலை
Cinema VFX என்ற தலைப்பில் திரு.லோகேஸ்வரன்(பிரசாத் EFX)  அவர்களும், Kids magazines என்ற தலைப்பில் திரு.சிவராஜ்(ஆசிரியர் தும்பி சிறுவர் இதழ்) அவர்களும் உரையாற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 

மாலை
Documentary Film Making என்ற தலைப்பில் திரு.கவிதா பாரதி(ஒளிப்பதிவாளர்),Online Media- என்ற தலைப்பில் திரு.கார்த்திக் கிருஷ்ணா (தி இந்து) அவர்களும் உரையாற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

st.thomas

02-03-2018 (நான்காம் நாள்) காலை
Publishing Books On Cinema என்ற தலைப்பில்  திரு.வேடியப்பன்(அயல் சினிமாஸ்)  அவர்களும், Media And Right To Expression என்ற தலைப்பில் திரு.குமரேசன் (தீக்கதிர்)   அவர்களும் உரையாற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 

மாலை 
பரிசளிப்பு விழா நடைபெறும். பின்வரும் நடுவர்கள்(JURIES) மூலம் சிறந்த படைப்புகளுக்கு பரிசும் பாராட்டும் வழங்கப்படும். 

நடுவர்கள்
கலை(ART) -திரு.செல்வகுமார்(கலை இயக்குனர்)
புகைப்படக்கலை(PHOTOGRAPHY) -திரு.ராஜ்குமார்(ஒளிப்பதிவாளர்)
வடிவமைப்பு(DESIGN) -திரு.ஹாசிப்கான்(ஆனந்த விகடன்)
குறும்படம் (SHORT FILM) -திரு. பீர் முகமது(ippothu.com)

இடம்: புனித தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்பேடு, சென்னை 600107