Skip to main content

கஷ்டத்தில் உதவிய சிம்பு... கெட்டவன் இயக்குனர் சிறப்பு பேட்டி!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

சிம்புவின் நடிப்பில் இயக்குனர் நந்துவின் இயக்கத்தில் உருவாகி நிதி நெருக்கடியால் வெளியாகாமல் இருக்கும் படம் கெட்டவன். இந்த படத்தை இயக்கிய நந்து தற்போது கே.டி. கண்டி என்று பெயரை மாற்றி, டே நைட் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டுள்ள த்ரில்லர் திரைப்படமான இது ஃபிப் 14ஆம் தேதி வெளியாகிறது. இதன் வெளியீட்டை முன்னிட்டு நமக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார் இயக்குனர் என்.கே. கண்டி. 
 

n k kandi

 

 

அப்போது, சிம்புவுக்கும் உங்களுக்கும் சண்டையா, ஏன் அப்படி புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் என்.கே. கண்டி, “பலரும் கமண்ட் போடுகிறார்கள். ஒரு வீடியோவை பார்த்தால் அது நல்லா இருக்கு, இல்லை என்று கண்டிப்பாக கமண்ட் வரவேண்டும். அப்படி வந்தால்தான் மக்கள் என்னமாதிரி ரியாக்ட் செய்கிறார்கள் என்பது தெரியவரும். நான் பேசிய எந்த வீடியோவிலும் சிம்புவை விட்டுக்கொடுத்ததும் கிடையாது, தவறாக பேசியதும் கிடையாது. நீங்கள் வேண்டுமானாலும் ஒவ்வொரு வீடியோவை பார்த்தீர்கள் என்றால் தெரியும். இதையெல்லாம் தவறாக புரிந்துக்கொண்டு அப்படி கமண்ட் செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் ரசிகர்களா? வேறொரு ரசிகராக இருந்துக்கொண்டுஇவர்களை ட்விஸ்ட் பண்ணிவிட வேண்டும் என்று செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். உடல் அங்கத்தில் எவ்வளவோ வெளியே தெரிகின்ற உறுப்புகள் இருக்கின்றன. ஆனால், வெளியே தெரியாத உறுப்புகளை குறிப்பிடுவது கொஞ்சம் வருத்தமாகதான் இருக்கிறது. அப்படி பேசுபவர்கள் வேறொரு வழியில் பிறந்திருப்பார்கள் என்று நினைக்க தோன்றும்” என்று கூறினார்.
 

day night


அப்போது அவருடன் இருந்த டே நைட் படத்தின் ஹீரோ ஆதர்ஷ், “இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனருக்கு குழந்தை பிறந்தது. அப்போது, அவருடைய மனைவியை மருத்துமனையில் இருந்து அழைத்து வர பணம் இல்லாமல், நகையை அடகு வைக்கும் நிலையில் இருந்தார். நகையை அடகு வைத்து விடலாம் என்ற தருணத்தில் சிம்புதான் அந்த மொத்தை தொகையையும் கட்டினார். சிம்பு பல உதவிகளை மறைமுக செய்திருக்கிறார் என்பதை இயக்குனர் மூலம் தெரிந்துகொண்டேன். அப்படி இவருக்கும் செய்த உதவியை இங்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று சிம்பு இயக்குனர் என்.கே. கண்டிக்கு செய்த உதவியை தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்