Skip to main content

வைகோவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து கலைஞருக்கு பொறாமையா ? கடந்த காலத் தேர்தல் கதை -5

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

2004 ஆம் ஆண்டு  திமுக தலைமையில் பலமான கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்கிறது ஜனநாயக முற்போக்கு கூட்டணி . நிச்சய வெற்றி என்று அந்த கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகமா களமிறங்கியிருக்கும் நிலையில் மதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் பரபரப்பாக செய்தி வெளியாகின . அப்போது இது பற்றி வைகோவின் கருத்தை அறிய அவரை சந்தித்து பேட்டி எடுத்த போது அவர் கூறியது . 

 

vaiko



அப்போது வைகோ அவர்கள் எங்கள் இரண்டு கட்சி தொண்டர்களிடையே அந்த மாதிரியான நெருடல்கள் எதுவும் இல்லை .விருதுநகர் மாநாட்டுக்கு சென்ற போது லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் பாசம் பொங்க அன்போடு என்னை வரவேற்றார்கள் . இரண்டு கட்சி தொண்டர்களும் ஒன்றாக சேர்ந்து அணைத்து இடங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்து தேர்தல் குறித்து ஓன்றை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம் . நெருக்கமான உறவோடு தான் நங்கள் தேர்தலை சந்திக்கிறோம் .40 இடங்களிலும் வெற்றி பெற முடியும் , மக்கள் ஆதரவு அலை இருக்கிறது என்பதை தலைவரிடம் சொன்னேன் . அந்த அளவுக்கு இயல்பான நெருக்கத்தோடு செயல் படும் போது நெருடலுக்கு ஒன்றும் இடமில்லை . மயிலாப்பூர் பொதுக் கூட்டம் நடந்த அதே நேரத்தில்  தி .நகரிலும்  ஒரு கூட்டம் நடந்ததையும் ஒரு செய்தியாக சொல்ராங்க . நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் ஒரே நேரத்தில் இரு கூட்டங்கள் நடப்பது சாதாரண விஷயம் .ஒரே நாளில் ஐந்து , ஆறு கூட்டங்கள் கூட நடக்கும் .  அன்றைக்கு மயிலாப்பூர் கூட்டத்துக்கும் வந்து விட்ட வேட்பாளர் டி .ஆர் . பாலு , கூட்டம் முடியும் வரை காத்திருந்து , என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டுத்தான் சென்றார் . அதனால் நெருடல் என்ற பேச்சுக்கே இடமில்லை .எதிர் காலத்திலும் எந்த நெருடலும்  இருக்காது .

 

vaiko



அந்த சமயத்தில் வைகோ அவர்களுக்கு வரும் கூட்டத்தை பார்த்து கலைஞர் பொறாமை என்று கூட செய்திகள் வெளியாகின அதுக்கு வைகோ அவர்கள் கலைஞர் அவர்கள் ரொம்ப மகிழ்ச்சி அடைவார் . அவருடைய கவிதையை படிச்சு பார்க்கணும் . கவிதையை படித்து புரியாட்டி நாம அதுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது தான் . அவர் சங்கத் தமிழ் எழுதியவர் . குறளோவியம் தீட்டியவர் . பராசக்தி , மனோகரா , பூம்புகார் , குறவஞ்சி திரைக்காவியங்களை எழுத்திருக்கிறார் . அந்த பேனாவில் பல்லாயிருக்கணக்கான உடன் பிறப்பு மடல்கள் எழுத்திருக்கிறார் . அவர் , வைகோ வருக ... வாழ்க ... என்று பாசப்பட்டயமாக ஒரு கவிதை எழுதியிருக்காரே . அது காலத்தை வென்று நிற்கக்  கூடிய ஒரு கவிதை . அதுக்கு நான் தகுதியானவனா என்பது வேறு கேள்வி .

 

vaiko



ஆனால் அவர் அவ்வளவு பாசப்பிணைப்போடு , வீரன் நீ ., தீரன் நீ ., என்று எழுத்திருக்கிறார் . உன்னை நானறிவேன் என்னை நீயறிவாய் என்றெல்லாம் எழுத்திருக்கிறார் . இவை எல்லாம் இயல்பாக உள்ளத்தின் அடித்தளத்தில்  இருந்து வருவது . இன்னும் சொல்லப் போனால் , ஒரு கட்டத்தில்  ஒரு தாய் , மகனுக்கு வராகி கூடிய பெருமையை கண்டு எப்படி பூரித்திருப்பாளோ ? அப்படி தம்பிக்கு வரும் பெருமையை கண்டு நான் பூரித்து  புளகாங்கிதம் அடைகிறேன் என்று சொன்னார் . அந்த பாசத்தோடு தான் இருக்கிறார் இதெல்லாம் கற்பனையாக , எங்கேயாவது உருவாக்க முடியுமா ... என்கிற விசமத்தனமான நோக்கத்தில் யாரது எழுதலாம் , சொல்லலாம் தவிர  , இம்மியளவு கூட இதில் உண்மை கிடையாது . அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தான்  இது போன்ற செய்திகளை  பரப்புகிறார்கள் என்று கூறி இருந்தார்  .  2004 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியில் பங்கு ஏற்காமல், பிரச்சினைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்தது. பல்வேறு பிரச்சினைகளில் அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, 2007 ஆம் ஆண்டு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.