Skip to main content

ஐசிசி தசாப்த விருதுகள் - விராட் கோலி, தோனி தேர்வு..

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
virat - dhoni

 

 

சர்வதேச கிரிக்கெட் வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த  வீரர்களைத் வைத்து, தசாப்தத்தின் கனவு ஒரு நாள், டெஸ்ட், மற்றும் 20 ஓவர் அணிகளை வெளியிட்டது. இந்த அணிகளில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

 

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம், இந்த தசாப்தத்தின் சிறந்த வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த அறிமுக வீரர் ஆகியோர்களை தேர்வு செய்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

இதில் இந்த தசாப்தத்தின் சிறந்த வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தசாப்தத்தின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதையும் விராட் வென்றுள்ளார். தசாப்தத்தின் சிறந்த டெஸ்ட் வீரராக ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 20 ஓவர் போட்டிகளில் சிறந்த அறிமுக வீரராக ரஷீத் கான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அறத்துடன் விளையாடிய விருதுக்கு தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில், ரன் அவுட்டான இயான் பெல்லை திரும்ப பேட்டிங் செய்ய அழைத்ததற்காக இந்த விருதுக்கு தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ellyse perry

 

மகளிர் கிரிக்கெட்டில், கடந்த தசாப்தத்தின் சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் மற்றும் இருபது ஓவர் வீராங்கனை ஆகிய மூன்று விருதுகளையும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி வென்று சாதனை படைத்துள்ளார்.