Skip to main content

இரண்டாவது டெஸ்டிற்குத் தயராகும் ஜடேஜா...

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

jadeja

 

இந்தியா - ஆஸ்திரலியா அணிகள் மோதிய முதலாவது இருபது ஓவர் போட்டியின்போது தலையில் பந்து தாக்கியதால், அந்தத் தொடரிலிருந்து விலகினார் ஜடேஜா. அதனைத் தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் ஜடேஜா விளையாடவில்லை.


இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்டில் ஜடேஜா களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 


அதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஜடேஜா பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டுவரும் வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும், ஜடேஜா 'பாக்ஸிங் டே' போட்டிக்குத் தயாராவதாகவும் இந்தியக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.