Skip to main content

+1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! 

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
11th std public Exam Results Released Today

தமிழ்நாட்டில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (14.05.2024) காலை 09:30 மணிக்கு வெளியாகிறது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2023 - 24ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு (11ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு முடிவுகள் 14.05.2024 (செவ்வாய்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

எனவே மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https/resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் காலை 09.30 மணிக்கு அறிந்துகொள்ளலாம். தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். 

11th std public Exam Results Released Today

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல்களிலும் (National Informatics Centres), அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்