Skip to main content

மோசமான சாதனை படைத்த இந்தியா...சொதப்பிய வீரர்கள்! 

Published on 19/12/2020 | Edited on 19/12/2020
ind vs aus

 

 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின், முதலாவது போட்டி அடிலெய்ட்டில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்த்து. அதனைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 191 ரன்களில் ஆட்டமிழந்தது. இதானால் 53 ரன்களோடு இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள், ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

 

இந்தநிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. அணியில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்தார். இறுதியில் மொஹம்மது ஷமி காயம் காரணமாக வெளியேறியதால் இந்திய அணியின் இன்னிங்ஸ் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது முடிவுக்கு வந்தது. இந்திய அணி எடுத்த 36 ரன்கள், டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் இந்திய அணி எடுத்த குறைந்த  ரன்னாக பதிவாகியுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 42 ரன்கள் எடுத்ததே இந்தியா எடுத்த குறைவான ரன்களாகும்.

 

ஆஸ்திரேலியா அணிக்கு 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வருகிறது. முன்னிலையில் இருந்த இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு, இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர்.