Skip to main content

இந்தியாவுக்கு சவால்! - நான்கு ஸ்பின்னர்களை களமிறக்கும் ஆப்கானிஸ்தான்

Published on 30/05/2018 | Edited on 30/05/2018

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஸ்பின்னர்களைக் கொண்டு, எதிரணியினரை மிரட்டிவரும் இந்திய அணிக்கு சவால் விடும் விதமாக, நான்கு ஸ்பின்னர்களைக் களமிறக்குகிறது ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி.
 

Afganistan

 

ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட அனுமதி பெற்றுள்ளதை அடுத்து, அந்த அணி தனது முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, வரும் ஜூன் 14ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. 
 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், அஜிங்யா ரகானே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் நடந்துமுடிந்த ஐ.பி.எல். தொடரில் மிகச்சிறப்பாக ஆடிய ரஷீத்கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் களமிறங்குகின்றனர். அதேபோல், சுழற்பந்து வீச்சாளர்கள் அமீர் ஹம்சா மற்றும் ஜாகீர் கான் ஆகியோரும் விளையாட இருக்கின்றனர். இந்த அணியை அஷ்கர் ஸ்டானிக்சாய் தலைமை தாங்குகிறார்.
 

இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர்களால் அதிகம் ஜொலிக்கமுடியும் என்பதால், ஆப்கானிஸ்தான் அணி எடுத்திருக்கலாம். அதேசமயம், இந்திய அணியிலும் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் களமிறங்குகின்றனர். எனவே, ஸ்பின்னர்களை சவாலாக களமிறக்கும் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கலாம்.