Skip to main content

ஒமிக்ரான் அச்சம்: தள்ளிவைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்பிரிக்க சுற்றுயப்பயணம்!

Published on 02/12/2021 | Edited on 02/12/2021

 

south africa

 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடிவரும் இந்திய அணி, அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஒமிக்ரான் வகை கரோனா பரவிவருவதால், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லுமா என்ற கேள்வி எழுந்தது.

 

இந்தநிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசித்துவருவதாகவும், ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள தேதியிலிருந்து இந்தத் தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படவுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

நேற்று முன்தினம் (30.11.2021) ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் குறித்து முடிவெடுக்க இன்னும் நேரம் இருப்பதாகவும், வீரர்களின் பாதுகாப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும்தான் பிசிசிஐ எப்போதும் முன்னுரிமை அளிக்கும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.