Skip to main content

கேட்டு வாங்கி தண்ணீர் குடித்த அணில்(வீடியோ)

Published on 09/06/2018 | Edited on 10/06/2018

இங்கிலாந்தைச் சேர்ந்த பவுல் கேம்பஸ் என்பவர் சம்மர் விடுமுறையை முன்னிட்டு அரிசோனா மாகாணத்திலுள்ள கிராண்ட் கனயன்க்கு சென்றுள்ளனர். அப்போது, ஒரு அணில் அவரையே தொடர்ந்து வந்துள்ளது. இவர் திரும்பி பார்த்த பின்னர் அது குழந்தையை போன்று கையை தூக்கிக்கொண்டு நின்றுள்ளது. அவரும் தன்னிடம் இருந்த வாட்டர்கேனை தன் காதலியிடம் கொடுத்துவிட்டு இதை தூக்கி ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்துள்ளார். பவுல் பாட்டிலை காதலியிடம் கொடுத்தவுடன், அணில் காதலியிடம் தூக்குவது போன்று செய்கை காட்டியுள்ளது. அதன் பின் தான் இருவரும் புரிந்துகொண்டனர் அணில் வாட்டர் பாட்டலிலுள்ள தண்ணீர் கேட்கிறது என்று. பாட்டிலை திறந்து அணிலை தண்ணீர் குடிக்க வைத்துள்ளனர்.

 

 


பவுல் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்