Skip to main content

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Tharman Shanmugaratnam sworn in as the President of Singapore

 

சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றுக் கொண்டார்.

 

சிங்கப்பூரில் அதிபராக இருக்கும் ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு முன்னதாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் (வயது 66), இங் கொக் சொங் மற்றும் டான் கின் லியான் என மூன்று பேர் போட்டியிட்டனர். கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவித வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து இவரின் வெற்றியை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் சிங்கப்பூரின் 9 வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் நேற்று  பதவியேற்றுக் கொண்டார். அதிபராக பதவியேற்றுக் கொண்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு சர்வதேச அளவில் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும், கல்வி, நிதி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்