அண்மையில்தான் ரஷ்யாவில் கால்பந்து போட்டி நடைபெற்றது முடிந்தது. ஆனால் எந்தவித சத்தமும் இல்லாமல் இன்னொரு உலககால்பந்து போட்டியும் நடைபெற்றது. EA எனும் வீடியோ கேம் நிறுவனம் நம்மில் பலர்க்கு தெரிந்திருக்கும் அந்த நிறுவனம் கிரிக்கெட், கால்பந்து என பல வீடியோ கேம்களையும் உருவாக்கியள்ளது. தற்போது அந்த நிறுவனம் இ-உலககால்பந்து கோப்பையை நடத்தியது. அந்த கால்பந்து போட்டி மைதானத்தில் நடப்பது அல்ல வீடியோ கேமில் கால்பந்து விளையாண்டு வெல்ல வேண்டும்.
இந்தப்போட்டியில் உலகளவில் சுமார் 2 கோடி பேர் கலந்துகொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் இறுதி போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. அந்த இறுதி போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி என்பவர் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்டீபனோ என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். எமெஸ்டாஸ்ட்ரி கூறுகையில் நான் சிறுவயதிலிருந்தே வீடியோ கேம் மீது ஈர்ப்பு அதிகம் எனது நண்பர்கள் கூட என்னை வீடியோ கேம் பைத்தியம் என கூறுவார்கள் எனக்கூறினார் .அந்த போட்டியில் வென்ற அவருக்கு 2.5 லட்சம் டாலர் அதவாது 1.7 கோடி பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிட்டதக்கது.