Skip to main content

ஊரடங்கு தளர்வு; உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை...

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

who about lockdown relaxation

 

ஊரடங்கை தளர்த்தும் நாடுகள் கரோனா பரவலை மிக கவனமாக கையாளவில்லை என்றால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 38 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 2.6 லட்சத்திற்கும் மேலானவர் இதனால் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு, இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், இதனால் பல நாடுகள் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை பொருளாதாரத்தை காரணம்காட்டி பல நாடுகள் தளர்த்தி வருகின்றன. இந்தியாவிலும் தற்போது இந்த தளர்வு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ஆனாலும் கரோனா பாதிப்புக்கு நாளுக்குநாள் உயர்ந்தவண்ணமே உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை தளர்த்தும் நாடுகள் கரோனா பரவலை மிக கவனமாக கையாளவில்லை என்றால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 


இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முன் கரோனா பாதிப்பு மற்றும் நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் நன்கு ஆராய வேண்டும். ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்றால் மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்" என தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்