Skip to main content

ஊழியர்களுக்கு ஊதியம் பிடிப்பு... செக் வைத்த விப்ரோ

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

 Salary deduction for employees... Wipro


பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ பணித்திறனை எட்டாத ஊழியர்களின் ஊதியத்தில் செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதியவிகித்ததை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

 

A, B வரிசையில் உள்ள புதிய ஊழியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கான செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகிதத்தில் 30 சதவிகிதத்தை பிடிக்க இருப்பதாகவும் ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து ஊதிய பிடித்தம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல் C வரிசையில் உள்ள மூத்த ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான மாறும் ஊதிய விகித திட்டத்தைத் திரும்பப் பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளது 'விப்ரோ'. அந்நிறுவனத்தின் மூலம் கிடைத்த வருவாய் 15 விழுக்காடு குறைந்த நிலையில் இந்த நடவடிக்கையை 'விப்ரோ' எடுத்துள்ளது

 

 

சார்ந்த செய்திகள்