Skip to main content

லைவில் நடுவிரலை காட்டிய செய்தி வாசிப்பாளர்...

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
news


பாகிஸ்தானை சேர்ந்த சமா டிவியில், செய்தி ஒளிப்பரப்பாகிறது  என்பது தெரியாமல் லைவில் நடுவிரலை காட்டி வம்பிழுத்த செய்தி வாசிப்பாளரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 

சமா டிவியின் செய்தி தொடர்பாளர், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த சூப்பர் லீக் 4 போட்டியின்போது, பாகிஸ்தானின் விளையாட்டை புகழ்ந்து பேசிகொண்டிருந்துள்ளார். இதனை அடுத்து இடைவேளை விட்டபின் கேமராக்கு பின் யாரோ ஒருவரை வம்பிழுத்துக் கொண்டிருந்துள்ளார். திடிரென வம்பிழுத்துக்கொண்டிருக்கும் செய்திவாசிப்பாளருக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் அந்த நிகழ்ச்சியை லைவ் செய்ய, அதை அறியாமல் செய்திவாசிப்பாளர் நடுவிரலை காட்டி மேலும் அந்த நபரை வம்பிழுத்துள்ளார். இறுதியில், லைவில் இருப்பது தெரிந்தவுடன், சட்டென்று செய்திவாசிக்க தொடங்கிவிட்டார். கேமரா லைவில் இருக்கிறது என்பதை உடனிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் அறிந்திருக்க, இவரை நடுவிரலை காட்டும்போது  சிரித்துக்கொண்டிருந்தார். 
 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் இரு விதமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பலர் இச்செயலை செய்ததற்காக இந்த செய்தி வாசிப்பாளரின் வேலையை பறிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். சிலர், இதை காமெடியாக பார்க்கின்றனர். சில உடகவியளாலர்கள், பத்திரிகை தொழில் இறந்துகொண்டு இருக்கின்றது என்று தெரிவிக்கின்றனர்.
  


 

சார்ந்த செய்திகள்