Skip to main content

தூத்துக்குடி தியாகி 'ஸ்னோலின்' பெயரில் நுழைவாயில்! காஷ்மீர் குழந்தை 'ஆஃசிபா' பெயரில் அரங்கம்!

Published on 02/06/2018 | Edited on 02/06/2018
mkp


ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP)யின் சார்பில் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலுக்கு தூத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்'  ஆலைக்கு எதிராக போராடிய 13 பேரில், வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி உயிர் துறந்த 17 வயது சகோதரி 'ஸ்னோலின்' பெயரை சூட்டியிருந்தனர். 
 

அதுபோல, அரங்கத்திற்கு பாஜகவினரால் காஷ்மீரில் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளாகி இறந்த அன்பு குழந்தை ஆஃசிபாவின் பெயரை சூட்டியிருந்தனர்.

 

mkp


நோன்பு துறப்புக்கு முன்பாக, தூத்துக்குடி ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் 1 நிமிடம் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.

இந்த மூன்று நிகழ்வுகளும் தேசத்தை  கடந்து வாழும் இந்தியர்களிடம் ஏற்பட்டிருக்கும் வலிமையான அரசியல் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இருந்தது. இந்நிகழ்ச்சியில் 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்ற பாடலை தோப்புத்துறை ஹாஜா பாடி பரவசப்படுத்தினார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தமிழக அரசியல் குறித்து சிறப்புரையாற்றினார்கள். பிறகு துண்டு சீட்டுகள் மூலம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

 

mkp

 
தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் வருகை தந்து தமிமுன் அன்சாரியை சந்தித்து அவரது சட்டமன்ற பணிகளுக்கு வாழ்த்து கூறினர். 6 மணிக்கெல்லாம் கூட்ட  அரங்கம் நிறைந்து. அரங்கத்திற்கு வெளியில் மக்கள் திரண்டிருந்தனர். நோன்பு துறப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த அரங்கிலும் மக்கள் உட்கார்ந்திருந்தனர். பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது. 

7 மணி நெருங்கியதும் அந்த ஹோட்டலில் எல்லா பகுதிகளிலும் இளைஞர்கள் கூட்டம் நிரம்பியது. பிறகு நோன்பு துறப்பு நடைப்பெற்றதோடு, ஒரே நேரத்தில் திரண்ட மக்களுக்கு, மனிதநேய கலாச்சார பேரவை தொண்டர் அணியினர் உடனடியாக கூடுதல் உணவுப் பொருள்களை வரவழைத்து வினியோகித்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன முதல்வர்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
The Chief Minister gave good news to the cricket fans
கோப்புப்படம்

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் வலைத்தளத்தில், “கடந்த சில நாட்களாக கோயம்புத்தூர் முழுவதும் பிரச்சாரம் செய்தபோது விளையாட்டு மீது ஆழ்ந்த ஆர்வமுள்ள பல இளைஞர்களை சந்தித்தோம். தடகளம், துப்பாக்கி சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங், குதிரையேற்றம் போன்ற பல்வேறு விளையாட்டுகள் மற்றும் குறிப்பாக கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் கோவை இளைஞர்களின் ஆர்வம் ஈடு இணையற்றது. இது 3 தமிழ்நாடு பிரிமியர் லீக் அணிகளின் (TNPL) உரிமையாளர்களின் தாயகமாகும். மேலும் வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் நட்சத்திரங்களில் பலர் தமிழகத்தின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள்.

எனவே கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் இளைஞர்களின் திறமைகள் வெளிக்கொணருவதற்கும், தமிழ்நாட்டில் மற்றொரு உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் உண்மையான தேவையைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூரில் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு வசதிகள் கொண்ட சர்வதேச அளவிலான கிரிக்கெட் ஸ்டேடியத்தை நிறுவ வேண்டும் என முதலமைச்சரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இளைஞர்களின் வளமான விளையாட்டு திறமைகளை வளர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

The Chief Minister gave good news to the cricket fans

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் பதிவை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விளையாட்டு மற்றும் கிரிக்கெட் ஆர்வலர் என்ற முறையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியைச் சேர்க்க விரும்புகிறேன். கோயம்புத்தூரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்களின் தீவிர பங்கேற்புடன், கோயம்புத்தூரில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சி எடுப்போம். இந்த மைதானம் சென்னையின் சேப்பாக்கம் எம்,.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது சர்வதேச மற்றும் தரமான கிரிக்கெட் மைதானமாக இருக்க வேண்டும். அரசும் விளையாட்டுத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டில் திறமைகளை வளர்ப்பதற்கும், விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

லியோ வெற்றி விழா; இறுதி நேரத்தில் விஜய் எடுத்த திடீர் முடிவு

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

Leo Victory Festival; Vijay's decision to avoid crowds of fans

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில் மாலை 7 மணிக்கு மேல் விழா தொடங்கவுள்ளது. விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொள்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரங்கத்தின் வெளியில் மதியம் முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.

 

மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன்  5 கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 6 மணிக்கு விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் கூட்டம் இதனால் அதிகரிக்கும் என இன்று மாலை 3 மணிக்கே அவர் ரகசியமாக கார் ஒன்றில் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.