Skip to main content

இந்தியா அபார வெற்றி: 316 ல் சுருண்டது ஆஸ்திரேலியா!

Published on 09/06/2019 | Edited on 09/06/2019

லண்டனில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான உலக கோப்பை போட்டியில் இந்தியா தனது இரண்டாவது வெற்றியை கைப்பற்றியது.

 

 India victory!

 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 117 ரன்களும், விராட் கோலி 82 ரன்களும், ரோகித் சர்மா 57 ரன்களும்,பாண்ட்யா 40 ரன்களும் எடுத்தனர். 

 

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியை  36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி  இந்தியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 316 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. புவனேஷ் குமார், பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றிக்கு வித்திட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்