Skip to main content

நடு வானில் பாலியல் தொந்தரவு; தமிழக இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

 

har

 

விமானத்தில் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது உடன் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபு அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் லாஸ்வேகாஸில் இருந்து டெட்ரியாட் நகருக்கு  விமானத்தில் சென்றுள்ளார். அந்த விமானத்தில் இரவு பயணத்தின்போது பக்கத்து இருக்கையில் இருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெட்ரியாட் காவல்துறையில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் அந்த இளைஞர் மீதான குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்