Skip to main content

முதல் நாள் கையெழுத்து.. அதிரடி காட்டிய பைடன்!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

joe biden

 

அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல் நாளில் 15 நிர்வாக ஆணைகளில் அதிரடியாக கையெழுத்திட்டார். இதன்மூலம் அமெரிக்க அதிபர்களிலேயே முதல் நாள் அதிக கையெழுத்துகளையிட்ட அதிபர் என்ற பெருமையையும் ஜோ பைடன் பெற்றுள்ளார்.

 

ஜோ பைடன் முதல் நாள் போட்ட கையெழுத்துகளில் முக்கியமானவையாக கருதப்படுவது, முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் முடிவுகளை மாற்றியமைத்த உத்தரவுகள் ஆகும்.

 

சுற்றுசூழலைப் பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பாரிஸ் பருவகால ஒப்பந்தத்தில் இருந்து, ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்கா வெளியேறியது. தற்போது பைடன் தலைமையிலான அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையவுள்ளது. இதற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கான உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மெக்சிகோ - அமெரிக்கா இடையே தடுப்பு சுவர் கட்டுவதில் ட்ரம்ப் மிக உறுதியாக இருந்தார். சுவர் கட்டுவதற்கு நிதி அளிக்கும் விதமாக அவசரகால உத்தரவையும் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார் ஜோ பைடன்.

 

ஈரான், ஈராக், சிரியா, சோமாலியா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் அமெரிக்கா வருவதற்கு ட்ரம்ப் பயணத் தடை விதித்திருந்தார். அதனை பைடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் கரோனா தொற்று தீவிரமாக பரவிய நேரத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவைப் பாதுகாக்கிறது, அதுமட்டுமல்லாமல் அந்த அமைப்பு கரோனா வைரஸ் குறித்த துல்லியமான  தகவல்களை வழங்கவில்லை என கூறி அதிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதற்கான நடைமுறைகளையும் ட்ரம்ப் அரசு தொடங்கியது. இந்த நடைமுறைகளை நிறுத்திவைக்கவும் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்