Skip to main content

"என்னால் காத்திருக்க முடியவில்லை" - பில்கேட்ஸ் மகளின் இன்ஸ்டாகிராம் பதிவு!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

உலக பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதிக்கு ஜெனிபர் காதரின் , போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸு, எகிப்து நாட்டைச் சேர்ந்த குதிரைப் பந்தய வீரர் நயல் நாசருடன் சமீபத்தில் டேட்டிங் சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜெனிபர் கேட்ஸு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

bill gates daughter jennifer


அதில் "நயல் நாசர், நீங்கள் மிகவும் தனித்துவமானவர். தற்போது மிகவும் புதியவராய் உணர்கிறேன். நம்மால் பகிரப்பட்ட பலவிதமான உணர்வுகளில் இது சிறப்பான ஒன்று. இந்த இடம் அர்த்தமுள்ளதாக மாறி என்னை ஆச்சரியப்படுத்தியது. நம் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்ளவும், வளரவும், சிரிக்கவும், ஒன்றாக நேசிக்கவும் என்னால் காத்திருக்க முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவிற்கு லைக்குகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

 



இதற்கிடையில் அந்த பதிவிற்கு தந்தை பில்கேட்ஸூம், தாய் மெலிண்டாவும் வாழ்த்து தெரிவித்துள்ள ஒரு சுவாரஸ்யமான நிகழ்வும் அரங்கேறியுள்ளது. "இந்த பதிவை கண்டு என் உடல் முழுவதும் சிலிர்படைந்துவிட்டது... வாழ்த்துக்கள்...!" என பில்கேட்ஸ் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்