Skip to main content

ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள் - சென்னையில் பரபரப்பு

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

 

train


 

 



சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் கோட்டை ரயில் நிலையம் வந்துகொண்டிருந்தது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் கோட்டை ரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்தது.

 

 


இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் ரயில் டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட ரயில் டிரைவர்கள் ரயிலை நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர்.

இது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளும், ரயில்வே போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிக்னல் மாற்றி விடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்