Skip to main content

"108" க்கு ஒரு நாளைக்கு 15,000 அழைப்பு- பேரவையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

TN ASSEMBLY MINISTER VIJAYA BASKAR SPEECH

பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (20/02/2020) பேரவையில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள் ஒன்றுக்கு 15,000 அழைப்புகள் வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் எங்கு வருகிறது என்பதை அறிய 2 மாதத்தில் செயலி தொடங்கப்படும். டாக்ஸிகளை போல் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதையும் டிராக் செய்யும் வசதி இந்த செயலியில் இடம் பெற்றுள்ளது" என்றார்.  

 

சார்ந்த செய்திகள்