Skip to main content

ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வந்தடைந்த கமல்ஹாசன்!

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

tn assembly election campaign kamal haasan arrived at trichy

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி வந்தடைந்தார் 

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டு கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று (27/12/2020) மாலை 04.00 மணிக்கு திருச்சியில் மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த கமல்ஹாசன், பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவருடன் மகள் அக்ஷரா ஹாசன் உடன் வந்துள்ளார்.

tn assembly election campaign kamal haasan arrived at trichy

அதைத் தொடர்ந்து காரில் திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள வயர்லெஸ் சாலை மற்றும் கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில நிமிடங்கள் உரையாற்றி விட்டு ஓய்வெடுப்பதற்காக தனியார் ஹோட்டலில் கமல்ஹாசன் தங்குகிறார். பின்பு மீண்டும் இன்று மாலை 04.00 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு தன்னுடைய பிரச்சாரத்தை கமல்ஹாசன் துவங்க உள்ளார். அவருடைய வாகனம் உள்பட மொத்தம் 15 வாகனங்கள் மட்டுமே இந்த பிரச்சாரத்திற்கு கலந்துகொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

tn assembly election campaign kamal haasan arrived at trichy

திருச்சியைத் தொடர்ந்து தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்