Skip to main content

ஆளுநர் தனிச்சையாக துணைவேந்தரை நியமனம் செய்தது வருத்தமளிக்கிறது: சி.வி.சண்முகம்!

Published on 07/04/2018 | Edited on 07/04/2018
CV shanmugam


ஆளுநர் தனிச்சையாக துணைவேந்தரை நியமனம் செய்தது வருத்தமளிக்கிறது என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பு இல்லை. துணைவேந்தர் நியமனம் செய்வதில் தமிழக அரசு நியமனக்குழுவில் ஒரு உறுப்பினரை நியமிக்கிறது அத்துடன் அரசின் பணி நிறைவடைந்தது. இதன் பின் அனைத்தையும் அந்த குழு ஆளுநரிடம் ஒப்படைக்கும்.

வேந்தர் என்ற முறையில் ஆளுநர் தான் முடிவு எடுப்பார். அதனால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு ஒரு துளியும் தொடர்பு இல்லை. தமிழக அரசிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை. தமிழக அரசுக்கு தெரியப்படுத்தவதில்லை. யார் மூன்று பேர் தேர்ந்தேடுக்கப்பட்டனர்? அந்த மூன்று பேரில் யார் துணைவேந்தர் என எந்த தகவலையும் அரசுக்கு தெரியப்படுத்துவதில்லை.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை ஆளுநர் தன்னிச்சையாக நியமித்துள்ளார். ஆளுநர் தனிச்சையாக துணைவேந்தரை நியமனம் செய்தது வருத்தமளிக்கிறது. இந்தியவிலேயே உயர்கல்வியில் முதன்மையான மாநிலமாக தமிழகம் இருந்துவருகிறது. அப்துல்கலாம் போன்ற படித்த வல்லுனர்கள் தமிழகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். தமிழகத்தில் துணைவேந்தர் தேர்தெடுக்கப்படாதது உண்மையிலே வருத்தம்தான்.

சார்ந்த செய்திகள்