Skip to main content

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை; மணச்சநல்லூரில் பரபரப்பு!

Published on 13/05/2024 | Edited on 13/05/2024
Robbery in two consecutive houses in Manachanallur

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வாட்டச்சியர் அலுவலகம் அருகே கே.வி.ஜி நகரில் சரவணன்(35) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். சரவணனின் சொந்த ஊர் தீராம்பாளையம் கிராமம். இவர் அதே பகுதியில் துறையூர் மெயின் ரோட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஸ் பாய் என்ற ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தனது ஐஸ்க்ரீம் கடையில் பணியினை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு  வீட்டுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி அன்று வழக்கம்போல் கடையினை இரவு 10 மணிக்கு மூடிவிட்டு வீட்டிற்கு வந்தார். தனது மனைவி ஜெசி (30) நான்கு நாட்களுக்கு முன்னர் திருச்சி சங்கிலியாண்டபுரம் உள்ள தனது தாயார் உடல்நிலை சரியில்லை என்பதற்காக ஊருக்கு சென்றிருந்தார். இரவு வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டை சுத்தம் செய்து விட்டு வீட்டில் உணவு அருந்திவிட்டு, சிறுது நேரம் இளைப்பாறிய பிறகு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தனது சொந்த ஊருக்கு(தீராம்பாளையம்) செல்வதற்காக இரவு 10.30மணிக்கு மேல் வீட்டின் முன்பாக மரக்கதவு மற்றும் இரும்பு கதவவினை பூட்டிவிட்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். அன்று இரவே கொள்ளையர்கள் வீட்டில் யாரும் இல்லை என்பதை நன்கு அறிந்துகொண்டு இரவு 12 மணிக்குமேல் வீட்டின் தடுப்புசுவர் வழியாக ஏறி குதித்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 4.67 லட்சம் ரூபாய் ரொக்க பணம், நகை சுமார் 2 (மோதிரம், ஜெயின்) பவுன் போன்றவைகளை அலசி ஆராந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Robbery in two consecutive houses in Manachanallur

இதனைத் தொடர்ந்து சரவணனின் வீட்டிற்கு அடுத்தபடியாக உள்ள வீட்டிலும் இதேபோன்று கொள்ளை சம்பவம் அரங்கேறியது.  வீட்டின் உரிமையாளர் அங்கப்பன்  தனியார் (Ultra Tech) சிமெண்ட் ஆலையில் பணிபுரிந்து ஓய்வூபெற்றவர். இவரது சொந்தஊர் புள்ளம்பாடி அருகே புது உதமனூர். இவர் தனது மனைவியுடன் கே.வி.ஜி நகரில் வீடு வாங்கி இங்கேயே வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது மகன் மற்றும் பேரக்குழந்தைகளைப் பார்பதற்காக அங்கப்பனும் அவரது மனைவியும் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட கொளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரொக்க பணம் ரூ.1,00,000, 41 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.  தகவலின் பேரில் விட்டிற்கு வந்த அங்கப்பன் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரு வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும், மோப்பநாய் படை பிரிவினரும், சிறப்பு காவல்படையினரும் வந்து சோதனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை போனதால் அப்பகுதியில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்..

சார்ந்த செய்திகள்